பெரம்பலூர்: சாதி, தகாத வார்த்தைகளால் ஓட்டுநரை பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் செல்வகுமார். இவர், வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒட்டுநர் ஒருவரிடம் நேற்று (ஜூன்.21) அலைபேசியில் தொடர்பு கொண்டு சாதி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பேசும் இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
சாதி, தகாத வார்த்தைகளால் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாமக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குன்னம் வட்டாட்சியர் அலுவலகம், குன்னம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.