பெரம்பலூர்: கடலூர் மாவட்டம் சேர்வராயன் குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (27). இவர் உள்பட 6 பேர் ஒகையூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும், திருவளக்குறிச்சி ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரோ டிப்பர் லாரி ஒன்று யூ டர்ன் போடுவதற்காக வலது பக்கமாக திரும்பியுள்ளது.
அப்போது கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த மற்றவர்கள் அருகில் இருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சாரு நேத்ரா என்ற பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "நீ கருப்பாக இருப்பதால் உனக்கு சாமி கும்பிட அனுமதி இல்லை" கோயிலில் நடந்த கொடூர சம்பவம்!