நாமக்கல் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப். 30) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
அதில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜான் மகேந்திரன், துணைத் தலைவர் ஜவகர் அலி, ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்குச் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கடனுதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன், “தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு இந்திய அளவில் அதிகளவு கடனுதவி பெற்று தரப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் மக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தட்கோ மூலம் சிறுபான்மையினருக்கு கடந்தாண்டு ஒரு கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு 2.65 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், தமிழ்நாடு அரசு சிறுபான்மை மக்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துவருவதாகவும், இந்த ஆணையம் அரசுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க....அரசு விழிப்புணர்வு ஓவியத்தை அழித்து திருமாவளவனின் ஓவியத்தை வரைந்த ஓவியர் கைது