ETV Bharat / state

திட்டமிட்டப்படி டிசம்பர் 27ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் - மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் - Bandh over raising cost of speed control mechine

வேகக் கட்டுப்பாட்டு கருவி தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை கண்டித்து வரும் 27ஆம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி

author img

By

Published : Dec 11, 2020, 4:08 AM IST

நாமக்கல்: பிற மாநிலங்களை காட்டிலும், தமிழ்நாட்டில் வேகக் கட்டுப்பாட்டு கருவி கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுவருவதாக லாரி உரிமையாளர்கள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டிவந்தனர். இந்நிலையில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி நேற்று (டிசம்பர்10) நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் லாரிகளுக்கான வேகக் கட்டுப்பாட்டு கருவி தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுவருகிறது. இந்த கருவிகள் கர்நாடகாவில் ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒளிரும் ஸ்டிக்கர் வெளி மாநிலங்களில் 600 ரூபாய் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனவே ஜிபிஎஸ் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் போன்றவை ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தி வருவதால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது.

மேலும், வாகனங்களுக்கு பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவிகளைக் குறிப்பிட்ட எட்டு நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் (டிசம்பர் 9ஆம் தேதி) இடைக்காலத் தடை விதித்தது. எனவே ஜிபிஎஸ் கருவி பொருத்துவதில் பழைய நடைமுறையே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி செய்தியாளர் சந்திப்பு

வேகக் கட்டுப்பாட்டு கருவி கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக திட்டமிட்டப்படி வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிச. 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.