ETV Bharat / state

வந்தாச்சு ஆயுத பூஜை... பொறி பறக்கும் ‘பொரி’ தயாரிப்பு!

நாமக்கல்: ஆயுத பூஜையை முன்னிட்டு பொரி தயாரிக்கும் பணிகள் சூடு பிடித்துள்ளது. இந்த ஆண்டு பொரிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறப்படுவதால் பொரி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயுத பூஜைக்கு தயாராகியப் பொரி
author img

By

Published : Oct 5, 2019, 2:03 PM IST

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகளில் பொரிக்கு என்று தனி இடம் உண்டு. தமிழ்நாட்டில் நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பழமையான முறையில் பொரி தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அடுப்பில் பொரி தாயரிப்பு
அடுப்பில் பொரி தாயரிப்பு

கர்நாடகா, மேற்கு வங்கத்தில் இருந்து நேரடியாக 64 என்ற ரக நெல் வாங்கி, அதில் இருந்து அரிசி எடுத்து, அதில் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து காய வைத்து, சர்க்கரை, சோடா சேர்த்து பொரி தயாரிப்பதை 'ஓருப்பு பொரி' என்கின்றனர். அதேபோல் சிகப்பு அரிசியை வாங்கி அதில் பொரி தயாரிப்பதை 'சிகப்பரிசி பொரி' என்கின்றனர்.

ஆயுத பூஜைக்கு தயாராகியப் பொரி
ஆயுத பூஜைக்கு தயார்

மேலும், பொரி செய்யும்போது விறகுகள் மூலம் நெருப்பு மூட்டப்படுவதால் அந்த பொரியின் மனமும், சுவையும் மாறாமல் அப்படியே இருக்கும். இதனால், மக்கள் அடுப்பு பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர். இதற்கான ஆர்டர்களும் குவியத் தொடங்கியுள்ளது.

பொரி தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டும் தொழிலாளர்கள்

இதுகுறித்து பொரி தயாரித்து வரும் துரை என்பவர் கூறுகையில், ‘மூன்று தலைமுறைகளாக பொரி தயாரித்து வருகிறோம். கையால் தயாரிக்கப்படும் பொரி என்பதால் சுவை மிகுந்து காணப்படுவதால் மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஒரு மூட்டை பொரி ரூ.420க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டை விட இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்துள்ளதால் பொரி தயாரிப்பவர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நவராத்திரியை முன்னிட்டு களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!

Intro:ஆயுத பூஜையை முன்னிட்டு பொறி பறக்கும் பொரி தயாரிப்புBody:ஆயுத பூஜையை முன்னிட்டு நாமக்கல்லில் பொரி தயாரிப்பு சூடு பிடித்துள்ளது. நல்ல விலை கிடைக்கும் என்று கூறப்படுவதால் பொரி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகளில் பொரிக்கு தனி இடம் உண்டு. தமிழகத்தில் நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பழமையான முறையில் பொறி தயாரிக்கப்படுகிறது.

நாமக்கல் பரமத்தி,வேலூர், இராசிபுரம் ஆகிய இடங்களில் அடுப்பு மூலம் பழமையான முறையில் பொரி தயாரிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து நேரடியாக 64 என்ற ரக நெல் வாங்கி, அதில் இருந்து அரிசி எடுத்து, அதில், சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து காய வைத்து, சர்க்கரை, சோடா சேர்த்து பொரி தயாரிப்பது, முதல் ரகம். இது 'ஓருப்பு பொரி' என்று சொல்கின்றனர். சிகப்பு அரிசியை வாங்கி, அதில், பொரி தயாரிப்பது இரண்டாவது ரகம். இது 'சிகப்பரிசி பொரி' எனப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுக்கு முன், அடுப்பு வைத்து, பொரி தயாரித்து வந்தவர்கள், இயந்திரமயமாக்கலால், கால சுழற்சியின் கட்டாயத்தால் இயந்திரம் வைத்து பொரி தயாரிக்க துவங்கியிருக்கின்றனர். இருப்பினும் மாவட்டத்தில் அடுப்புகளில் பொரி தயாரிப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். விறகுகள் மூலம் நெருப்பு மூட்டப்படுவதால் அந்த பொரியின் மனமும், சுவையும் மாறாமல் அப்படியே இருக்கும். அதனால் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் பொரிகளை மக்கள் விரும்புவது இல்லை என்பதால், அடுப்பு பொறிக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து அடுப்பில் பொரி தயாரித்து வரும் துரை கூறும்போது " மூன்று தலைமுறையாக பொரி தயாரித்து வருவதாகவும் கையால் தயாரிக்கப்படும் பொரி என்பதால் சுவை மிகுந்து காணப்படுவதால் மக்கள் அதிகம் விரும்புவதாகவும் ஒரு பக்கா நெல்லிற்கு பத்து பக்கா பொரி கிடைப்பதாகவும் ஒரு மூட்டை பொரி ரூ.420 க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு நல்ல விலை கிடைத்துள்ளதால் பொரி தயாரிப்பவர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.