நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த அழகேசன், தனக்கு சொந்தமான தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ளார். இதனை சாப்பிட வந்த மூன்று காட்டுப் பன்றிகள் தவறி 70 ஆழ கிணற்றில் விழுந்தன.
சத்தம் கேட்டு அதிகாலை கிணற்றில் பார்த்தபோது, மூன்று காட்டுப் பன்றிகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. உடனடியாக ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், இரண்டு மணி நேரம் போராடி காட்டுப் பன்றிகளை மீட்டனர்.
பின்னர், மூன்று காட்டுப் பன்றிகளையும் வனத்துறை அலுவலர்கள் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புகாட்டில் விட்டனர்.