நாமக்கல் போஸ்டல் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களில் சுமார் ஏழாயிரம் மாணவர்கள் பயின்றுவருகின்றனர். கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் இப்பயிற்சி மையத்தில் பயின்ற 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலுள்ள பள்ளி நிறுவனத்தின் கிளைகளிலும், அதன் இயக்குநர்களின் வீடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சேதனையில், பள்ளி மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களின் விவரங்கள், அவர்களிடம் பெறப்பட்ட கல்வி கட்டணங்களின் ஆவணங்கள் குறித்தும் இயக்குநர்கள், அவர்களது உறவினர்களின் சொத்து விவரங்கள் குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: களத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை; பல லட்சம் ரூபாய் சிக்கியது?