நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட், விவிபேட் ஆகியவை நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பூட்டி சீல்வைக்கப்பட்டிருந்தன.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்கள், பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மெகராஜ், தேர்தல் பிரிவு அலுவலர்கள் 100 இயந்திரங்களை எடுத்து அதனை கணினியில் பதிவேற்றம் செய்து அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைத்தனர்.
