நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் கதிராநல்லூர் ஊராட்சி உள்ளது. 9-வார்டு ஊராட்சியில் தலைவராக நடராஜன் உள்ளார். துணைத் தலைவராக சௌந்தரராஜன் என்பவரை வார்டு உறுப்பினர்கள் ஒருமனதாக கடந்த ஜனவரி மாதம் தேர்வு செய்தனர்.
இந்நிலையில் ஊராட்சியின் 1,2,4,5,6 ஆகிய 5 வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், துணைத் தலைவர் செளந்தரராஜன் ஊராட்சியில் நடைபெறும் பல்வேறு பணிகளில் தலையிட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் தடுப்பதோடு, ஊராட்சி குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அனுமதித்து, அவரை பதவியில் இருந்து நீக்க அனுமதிக்க வேண்டும், அதேபோல் புதிய துணைத் தலைவரை தேர்வு செய்ய ஆணையிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.