ETV Bharat / state

நாமக்கல் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...! - ஜவ்வரிசி

கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் ஆளுகையிலிருந்து வெள்ளைக்காரர்களின் ஆளுகை வரை இருந்திருக்கிறது நாமக்கல். ஒருபுரம் கோட்டையும், மறுபுறம் இடைவிடாது இயங்கும் பட்டறைப் பேட்டையையும் உடையது நாமக்கல் நகரம் என்றால், மாவட்டத்தின் வடபுறம் மலைகளையும், தென்புறம் சமவெளிகளையும் கொண்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் கோழி முட்டைகளை அனுப்பி வைக்கும் மாவட்டம், நெசவுக்கும், லாரி கூடுக்கட்டும் தொழிலுக்கும், கல்வி நிலையங்களுக்கும் பெயர் பெற்றது. கொல்லிமலை, ஆகாய கங்கை போன்றவை மாவட்டத்தின் சுற்றுலா அடையாளம் என்றால், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலும் ஆன்மீக அடையாளங்களாகும். இம்மாவட்டத்தின் பிரதான ஆறுகளாக ஐய்யாறு, கரிப்பொட்டான் ஆறு மற்றும் திருமணிமுத்தாறு ஒடுகின்றன. காவிரி ஆறு தெற்கு திசையில் மாவட்டத்தின் எல்லையை அரவணைத்தவாறு செல்கிறது. விவசாயமும், நெசவும் பிரதானமான தொழிலாக இருக்க, பட்டறை மற்றும் முட்டை உற்பத்திக்கு புகழ் பெற்று விளங்குகிறது நாமக்கல். கடந்த 1997ஆம் ஆண்டு சேலத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாவட்டத்தின் வட திசையில் சேலம், தென் திசையில் கரூர், கிழக்கு திசையில் திருச்சி, மேற்கு திசையில் ஈரோடு மாவட்டங்கள் எல்லைகளாக சூழ்ந்துள்ளன.

நாமக்கல் தொகுதிகள் வலம்
Namakkal DISTRICT WATCH
author img

By

Published : Mar 25, 2021, 8:01 AM IST

வாசல்:

ஊருக்கு நடுவே ஒற்றைப் பாறையாய் உயர்ந்து, உச்சியில் கோட்டையை உடைய நாமகிரிமலை இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில், ஒரு மக்களவைத் தொகுதியும், ராசிபுரம் (தனி) சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என ஆறு சட்டபேரவைத் தொகுதிகளும் உள்ளன.

தொகுதிகள் உலா:

ராசிபுரம் (தனி) : விவசாயம், கோழிப்பண்ணை, தறித் தொழில் நிறைந்தத் தொகுதி. மரவள்ளிக்கிழங்கு அதிகம் விளைவதால், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி ஆலைகளும் உண்டு. பள்ளி, கல்லூரிகள் அதிகம் இருப்பதால் கல்வி நகரமாகவும் அறியப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டில் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது ராசிபுரம்.

தொகுதியின் தலையாயப் பிரச்னைகள் பாதாளச் சாக்கடைத் திட்டம், போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு. இங்குள்ள சாலைகள் அனைத்தும் குறுகி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. சாலைகளை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் தொகுதிவாசிகள். இந்தத் தொகுதிக்குட்பட்ட போதமலைப்பகுதிக்குச் சாலை வசதிகள் இல்லை. இங்குள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சேந்தமங்கலம் (பழங்குடியினர்): தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்று; தனித் தொகுதி. மூலிகைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் புகழ்மிக்க சுற்றுலாத் தலமான கொல்லிமலை இத்தொகுதியிலேயே அமைந்துள்ளது. விவசாயமும், செங்கல் சூளை தொழிலும் நடைபெறுகிறன.

கொல்லிமலையில் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும், இந்தப் பகுதியில் அரசு கல்லூரி ஒன்று தொடங்க வேண்டும். கொல்லிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும். மலை விளைப் பொருட்களுக்குச் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்பன இந்தத் தொகுதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகளாகும்.

நாமக்கல்: முட்டை உற்பத்திக்கும், லாரி தொழிலுக்கும் இந்தியளவில் புகழ்பெற்ற தொகுதி நாமக்கல். ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், ஒற்றை பாறையில் அமைந்த கோட்டை தொகுதியின் சொல்லிக் கொள்ளும்படியான அடையாளங்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு வரை தனித் தொகுதியாக இருந்த நாமக்கல், பின்னர் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.

நாமக்கல் தொகுதியின் தலையாய பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். நகரின் மையத்தில் இருக்கும் நகராட்சி பேருந்து நிலையத்திற்குப் பதிலாக, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் கோரிக்கை. இதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டும், அதனை கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

நாமக்கல் முதலைப்பட்டியில் தொடங்கி சேந்மங்கலம் வழியாக துறையூர் திருச்சி, லந்துவாடி, கரூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சுற்று வட்டச்சாலை அமைக்க வேண்டும். நாமக்கல் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும், கொசவம்பட்டி ஏரியைத் தூர்வார வேண்டும். நாமக்கல்லில் முட்டை தொழிலுக்கான ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும். சிப்காட் தொழில் பேட்டை ஒன்று தொடங்கப்பட வேண்டும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும், லாரி தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பன தொகுதியின் பிற தேவைகள்.

பரமத்திவேலூர்: தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தொகுதி. கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன்பு வரை கபிலர் மலைத் தொகுதியாக இருந்த இத்தொகுதி, பின்னர் பரமத்தி வேலூர் தொகுதியாக மாற்றப்பட்டது. காவிரி கரையில் இருக்கும் தொகுதி இது. காசி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை இத்தொகுதி வழியாக கடந்து செல்கிறது.

நாமக்கல் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

விவசாயமும், வெல்லம் தயாரிப்பும் முக்கியத் தொழில். தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடி செய்யப்படுகின்றன. மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. விவசாயம் தவிர வேலை வாய்ப்புக்கு வேறு தொழில்கள் இல்லை. வெற்றிலை விவசாயம் செழித்திருக்கும் இந்தத் தொகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது தொகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை.

திருச்செங்கோடு: பாலின சமத்துவ தத்துவத்தை உணர்த்தும் அர்த்த நாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள தொகுதி திருச்செங்கோடு. ராஜாஜியால் தொடங்கப்பட்டு, தந்தை பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட காந்தி ஆசிரம் இங்கு அமைந்துள்ளது. விவசாயம், நெசவுத்தொழில் முக்கியத் தொழிலாக நடக்கிறது.

'ரிக்' வாகனங்கள் எனப்படும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகனத் தொழிலுக்கு இந்தியளவில் பிரசித்தம் பெற்றது இத்தொகுதி. கணிசமான அளவில் கல்வி நிறுவனங்களும் உள்ளன. இங்கும் முக்கியப் பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல், இதனைத் தவிர்க்க சுற்று வட்டப்பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகால கோரிக்கை.

இதைப் போலவே 'ரிக்' வாகனத் தொழில், துணைத் தொழில்களுக்காக ஒரு தொழில் பேட்டை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குமாரபாளையம்: தொகுதி மறுசீரமைப்பின் போது, மாவட்டத்தில் பரப்பளவில் பெரியதாக இருந்த திருச்செங்கோடு தொகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்ட தொகுதி இது. இதுவரை இங்கு நடந்த இரண்டு தேர்தல்களில் அமைச்சர் தங்கமணியே வெற்றி பெற்றுள்ளார். தொகுதியின் முக்கியத் தொழில் நெசவு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இங்குள்ளன.

தொகுதியில் ஒருங்கிணைந்த சாயப்பட்டறை அமைக்க வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் எதிர்பார்ப்பு. இங்குள்ள தனியார் சாயப்பட்டறைகள் சட்ட விரோதமாகக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால், சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், தோல் நோய்களும் வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நெசவுக்குத் தேவையான நூல் விலை உயர்வால், நெசவுத் தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் இந்தத் தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள், உடல் உறுப்புகளை விற்று பிழைக்கும் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

களநிலவரம்:

மூன்று மாநிலங்களுக்கான முட்டைக்கு விலை நிர்ணயம் செய்யும் பகுதி நாமக்கல், ஆன்மீக, சுற்றுலாத் தலங்களுக்கும் பெயர் பெற்றது. அதிகமான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளதால் கல்வி நகரம் எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயம், நெசவு என மரபுசார் தொழில்களையும், லாரி தொழில், 'ரிக்' வாகன உற்பத்தி, லாரி கூண்டுக்கட்டும் தொழில் என, நவீன தொழில்களையும் ஒருங்கே கொண்டுள்ள மாவட்டம் நாமக்கல்.

போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுபாடு, தொழில்கள் நலிவடைந்து வருவது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கின்றன. முட்டை, பட்டறை தொழில் தவிர பிற தொழில்களுக்கான வாய்ப்புகள் இல்லை என்ற குறையும் உண்டு. இம்மாவட்டத்திலிருக்கும், ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பரமத்திவேலூர் ஒன்றைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளும், அதிமுக வசமே உள்ளன.

கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் தொகுதியில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக பலப்பரீட்சை நடத்துகின்றன. மாவட்டத்தில், ராசிபுரம், குமாரபாளையம் என இரண்டு தொகுதிகளும் அமைச்சர் தொகுதியாக இருந்தும், அவர்களால் பெரிதும் எந்த வளர்ச்சியையும் எட்டவில்லை.

பரமத்தி வேலூரை தக்கவைக்க திமுகவும், தட்டிப்பறிக்க அதிமுகவும் முனைப்புக்காட்டி வருகின்றன. பழங்குடியினர் தொகுதியான சேந்தமங்கலம் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாகவேப் பார்க்கப்படுகிறது. சதுரங்கத்தில் சரியாக காய் நகர்த்தும் போது, இந்தத் தொகுதி திமுக வசமாகலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.