நாமக்கல்லை அடுத்துள்ள புலவர்ப்பாளையத்தில் உலகநாதன் - ரூபாதேவி தம்பதியர் வசித்துவருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். பின்னர் நேற்று காலையில் திரும்பிவந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உள்ளே சென்று பார்க்கும்போது வீட்டின் அலமாரியிலிருந்த ஏழு சவரன் தங்கநகைகள், ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள், 5,000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக இச்சம்பவம் குறித்து பரமத்தி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீட்டில் ஆய்வு செய்தனர். இத்திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.