தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 5,000 பேரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்கிட வேண்டும், கேங்மேன் பதவியை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.