கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, நாமக்கல் வருகை தந்த ராஜேஷ் குமாருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மோகனூர் பரமத்தி சாலை சந்திப்பில் உள்ள, அண்ணா சிலைக்கு ராஜேஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

அப்போது, திமுகவினர் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலை சந்திப்பில், காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி நாட்டு வெடிகளை இரு சாலைகளுக்கு இடையில் தோரணமாகக் கட்டி, தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர்.
அதிக ஒலி எழுப்பக்கூடிய நாட்டு வெடிகளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலையில் கட்டி, நீண்ட நேரம் வெடிக்கவிட்டதால், அவ்வழியாக வாகனத்தில் சென்ற பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே சென்றனர்.
இதனால் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ வெற்றி செல்லும் - உயர் நீதிமன்றம்