நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 27 வார்டுகள் உள்ளன. இதில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ராசிபுரம் மக்களுக்கென பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ராசிபுரத்திற்கு 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்துவருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “தொடர்ந்து அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. தரமில்லாத குடிநீர் குழாய்கள் தான் அடிக்கடி ஏற்படும் உடைப்புக்கு காரணம்” எனத் தெரிவித்தனர்.
ஏற்கனவே குடிநீர் 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் குழாய் உடைந்ததால் மேலும் சிலநாள்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தடை ஏற்படும்.
எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: