ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,’வேட்பாளரின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அரசு வேலை வாங்கித் தரப்படும். குறைந்தபட்சம் 40 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும். அத்தோடு கூட்டுறவு சங்கங்களின் பொறுப்புகள் வாங்கி தரப்படும்’என்றார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமாரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசு வேலையை தங்கள் கட்சிக்காரர்களுக்கு அளிப்பதாக உறுதி அளித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா?