நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு 5 ஆயிரத்து 390 ரூபாய் முதல் 6 ஆயிரத்து 869 ரூபாய் வரையிலும், டி.சி.எச் ரகம் ரகம் குவிண்டால் 7 ஆயிரத்து 352 ரூபாய் முதல் 8 ஆயிரத்து 762 ரூபாய் வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 4 ஆயிரத்து 300 பருத்தி மூட்டைகள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் "கடந்த வாரங்களை விட இந்த வாரம் பருத்தியின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டாலும் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்கப்படுவதில்லை. சில நாள்களுக்கு பிறகே ஏலத்தொகை வழங்கப்படுவதால் விவசாயிகள் அலைக் கழிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மழையால் ஏலத்துக்கு வைக்கப்பட்ட பருத்தி மூட்டைகள் நாசம்!