ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு அறிவிப்பால் உழவர் சந்தையில் குவிந்த மக்கள் - Uzhaver Sandhai

நாமக்கல்: மக்கள் ஊரடங்கால் பொருள்களை வாங்க உழவர் சந்தையில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் உழவர் சந்தை கரோனா அச்சுறுத்தல் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் Namakkal Uzhaver Sandhai Uzhaver Sandhai corona threat Crowds at Uzhaver Sandhai
Namakkal Uzhaver Sandhai
author img

By

Published : Mar 21, 2020, 11:25 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமால் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நாமக்கல் உழவர் சந்தையில் வழக்கத்தை விட மக்களின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது. நாளை ஊரடங்கு என்பதால் தங்களுக்குத் தேவையான காய்கறி, வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க மக்கள் அதிகளவில் உழவர் சந்தையில் கூடினர்.

உழவர் சந்தையில் ஒன்று திரண்ட பொதுமக்கள்

உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் கரோனா குறித்த எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், அனைவரும் ஓரிடத்தில் கூடி காய்கறிகளை வாங்கிச் சென்றனர். சந்தைக்கு வந்த பொதுமக்களுக்கு கைகளைச் சுத்தம் செய்து கொள்ள கிருமி நாசினியை நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை.

இதனால், திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடியதால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் வெளியூர் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விலையும் கடந்த நாள்களை விட அதிகமாகவே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா அச்சம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்ட வேப்பிலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.