ETV Bharat / state

அனுமன் ஜெயந்தி: நாமக்கல் ஆஞ்சநேயருக்குப் பிடித்த வடை மாலை தயாரிக்கும் பணி தீவிரம்! - Vadamalai

நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

ஆஞ்சநேயர் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தி
author img

By

Published : Jan 8, 2021, 8:44 PM IST

அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அனுமன் ஜெயந்தி

ஆஞ்சநேயர் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தி

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டுகிறது. இந்நிலையில் இந்தாண்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையடுத்து நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்குப் பல்வேறு சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் நடைபெற உள்ளன.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பிடித்த வடைமாலை ரெடி
நாமக்கல் ஆஞ்சநேயருக்குப் பிடித்த வடை மாலை தயாரிக்கும் பணி

18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் வடமாலை தயாரிக்கும் பணி இன்று (ஜன. 08) தொடங்கியுள்ளது.

இந்தப் பணியினை மேற்கொள்ள திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் வந்து கலந்துகொண்டு வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
இது குறித்து பட்டாச்சார்யார்கள் கூறுகையில், "2250 கிலோ எடை கொண்ட உளுத்தம் பருப்பு மாவும், 32 கிலோ மிளகு, 33 கிலோ சீரகம், 750 லிட்டர் நல்லெண்ணெய் கொண்டு வடை தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. நான்கு நாள்களுக்கு நடைபெறும் இப்பணி இரவு பகலாக நடைபெறும்.
வடமாலை தயாரிக்கும் பணி
வடமாலை தயாரிக்கும் பணி

வரும் 12ஆம் தேதி அதிகாலை ஆஞ்சநேயருக்கு வடமாலை அலங்காரம் செய்யப்படும். ஆஞ்சநேயருக்கு உளுத்தம் வடை மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும், அதனை அனுமனுக்கு மாலையாக அணிவித்து பூஜை செய்யும்போது பூமி குளிர்ச்சியடையும் என்பது நம்பிக்கை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காந்தி குடும்பத்திலிருந்து அடுத்த புதுவரவு: அரசியலுக்கு அச்சாரம்போடும் வத்ரா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.