மயிலாடுதுறை: சீர்காழியில் ஈசானிய தெருவில் எரிவாயு தகனமேடை உள்ளது. பாதுகாப்புக்காக இதன் வாசல் பகுதியில் இரண்டு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கேமரா கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளது. கஞ்சா வாங்க வரும் நபர்கள் முகம், கேமராவில் பதிவாகிவருவதால் வாடிக்கையாளர்கள் அங்கு வர மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்ற இளைஞர், சிசிடிவி கேமராக்களை உடைக்க முடிவுசெய்துள்ளார்.
இரவு நேரத்தில் அங்கு வந்து தகனமேடை வாசலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை உடைக்கும் காட்சி மற்றொரு சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில், எரிவாயு தகன மேடை மேலாளர் பாபு புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: கஞ்சா விற்கும் கும்பல்களுக்கிடையே மோதல்? பதறவைக்கும் சிசிடிவி காட்சி