நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம், மாலா தம்பதி. இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதில், மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து காயமடைந்த பன்னீர்செல்வத்தை பொதுமக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கனமழை காரணமாக இரவு உறங்கிக் கொண்டிருந்த பெண் உயிரிழந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிகாரில் மருத்துவர் கொலை: இளைஞர் கைது!