கோடை காலத்தை முன்னிட்டு எர்ணாகுளம் - நாகப்பட்டினம் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வண்டி எண் 06035 எர்ணாகுளம் - நாகப்பட்டினம் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் எர்ணாகுளத்திலிருந்து சனிக்கிழமை தோறும் அதாவது ஜூன் 4, 11, 18, 25, ஜூலை 2, 9, 16, 23, 30, மற்றும் ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் இரவு 12.35 மணியளவில் புறப்பட்டு, காலை 5 மணியளவில் நாகப்பட்டினம் வந்தடையும் எனவும்.
மறுமார்க்கமாக வண்டி எண் 06036 நாகப்பட்டினம் - எர்ணாகுளம் வரை செல்லும் சிறப்பு ரயில் நாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் அதாவது ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3, 10, 17, 24, 31, மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் இரவு 7.10 மணியளவில் புறப்பட்டு இரவு 12 மணியளவில் எர்ணாகுளம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ரயில்கள் கேரளாவின் கோட்டயம், சந்கனச்செரி, திருவல்லா, செங்கனூர், மவேளிக்கற, கயம்குலம், சாஸ்தாங்கோட்டை, கொல்லம், குந்தரா, கோட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை மற்றும் தமிழகத்தில் செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் இந்த ரயில்சேவை தேதி நீட்டிப்பு குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: தனி ரயிலில் சென்று ஆய்வு செய்த மத்திய ரயில்வே அமைச்சர்!