மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுடி பார்த்திபன்(32). இவர் மீது இதுவரை 7 வழக்குகள் உள்ளது. பார்த்திபேன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மூன்று வருடங்களாக இவர் தலைமறைவாக இருந்துள்ளார். தொடர்ந்து இவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் பார்த்திபனை இன்று (நவ.17) சீர்காழி அருகே தனிப்பிரிவு காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நேற்று முன்தினம் (நவ.15) திருவெண்காட்டை சேர்ந்த லெனின் என்பவர் சாலையில் நடந்து செல்லும்போது கத்தியைக் காட்டி 4,500 ரூபாயை பார்த்திபன் வழிப்பறி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உடனே நெல்சன் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரிலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கின் அடிப்படையிலும் பார்த்திபனை தனிப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.