ETV Bharat / state

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது - திருமாவளவன் - மயிலாடுதுறை மாவட்டத்தில் பேசிய திருமாவளவன்

தமிழ்நாட்டில் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தவே பாஜக முயற்சித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருமாவின் பேச்சு
திருமாவின் பேச்சு
author img

By

Published : Apr 20, 2022, 7:06 PM IST

மயிலாடுதுறை: சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது திசை திருப்பும் முயற்சியாக உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த உருவாக்கப் பார்க்கிறார்கள். பாஜகவினர் வன்முறையைத் தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும்; அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர்.

ஹெச்.ராஜா ஆளுநர் ஆகிறாரா? பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியைச் சேர்ந்த அதி தீவிர மதவாத சக்திகளை ஆளுநராக நியமித்து வருகின்றனர். அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு பாஜக அரசு முயல்கிறது. அதன் அடிப்படையிலேயே ஹெச். ராஜா, கேரள ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வேண்டுமானால் ஹெச்.ராஜா வாயில் வந்ததை பேசித் திரியலாம். கேரளாவில் மெத்த படித்தவர்கள் உள்ளனர். இடதுசாரி சிந்தனையாளர்கள் அதிகம் அங்கு இருக்கிறார்கள். அவரது பேச்சு அங்கு எடுபடாது. இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கெனவே பல ஆயிரம் கோடி ரூபாய் உதவிகளை செய்துள்ளது.

திருமாவின் பேச்சு

அந்த உதவிகள் எல்லாம் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிபடுத்த வேண்டும், கண்காணிக்க வேண்டும். இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிகள் செய்வதற்குத் தயாராக உள்ளது. அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஆளுநரைத் தாக்க இது அதிமுக அரசு அல்ல - சட்டப்பேரவையில் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.