ETV Bharat / state

தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை!

நாகை: தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை
author img

By

Published : Dec 28, 2020, 12:01 PM IST

தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் உள்ளன. இதில் நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ஜூலை 15ஆம் தேதி மாவட்ட சிறப்பு அலுவலராக லலிதாவும், எஸ்பியாக ஸ்ரீநாதாவும் நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சிறப்பு அலுவலர் லலிதா மாவட்ட எல்லைகளை வரையறுக்கும் பணியில் ஈடுபட்டார். பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாட்டின் 38ஆவது புதிய மாவட்டமாக மயிலாடுதுறையை முறைப்படி இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

உதயமானது தமிழ்நாட்டின் புதிய மாவட்டம் மயிலாடுதுறை!

இதற்கான விழா மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட அலுவலர் லலிதா, எஸ்பி ஸ்ரீ நாதா, எம்எல்ஏக்கள் மயிலாடுதுறை ராதாகிருஷ்ணன், பூம்புகார் பவுன்ராஜ், சீர்காழி பாரதி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம்

இந்தப் புதிய மாவட்டத்தின் பிரதான தொழிலாக வேளாண்மையும், மீன்பிடித் தொழிலும் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,172 சதுர கிலோ மீட்டர்கள். இதில் வேளாண்மை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 550 ஏக்கர் சாகுபடி பரப்பில் நடைபெறுகிறது. மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை ஒன்பது லட்சத்து 18 ஆயிரத்து 356 ஆகும்.

மாவட்டத்தில் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்திற்கு கீழ் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாக்களும், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளும், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில், குத்தாலம் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களும், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய 2 நகராட்சிகளும், வைத்தீஸ்வரன் கோவில், மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு பேரூராட்சிகளும் அமைந்துள்ளன.

மேலும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் தலைமை இடமாகவும் திகழ்கிறது. மாவட்டத்தில் பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட 26 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் மீன் ஏற்றுமதி நடைபெறுகிறது. இங்கு பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய புராதன சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.

மேலும் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள், திவ்ய தேசங்கள் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் நிறைந்த ஆன்மிக மாவட்டமாகவும் திகழ்கிறது. சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க இரண்டு காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்குக் கீழ் 14 காவல் நிலையங்கள், இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மயிலாடுதுறை மாவட்ட உதயம் அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.