ETV Bharat / state

ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு; தமமுக கட்சியினர் போராட்டம்! - MK stalin effigy

நாகை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உருவபொம்மையை எரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு
author img

By

Published : Jul 15, 2019, 7:22 PM IST

10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சியினரின் கருத்து கேட்புக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், திமுக, கம்யூனிஸ்ட், விசிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்பொழுது கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கீகாரமில்லாத கட்சி என்று பேசியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் நாகை அவுரிதிடலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டாலின் உருவபொம்மை எரிப்பு

அப்போது, ஸ்டாலினின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், ஸ்டாலின் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற தரக்குறைவான வார்த்தைகளை உச்சரித்தால் தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் அக்கட்சியினர் எச்சரித்தனர்.

Intro:நாகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம்.Body:நாகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம்.

10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சியினரும் கருத்து கேட்பு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட், விசிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கு பெற்றனர். அப்போது கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு. க . ஸ்டாலினை கண்டித்து நாகை அவுரிதிடலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற தரம் குறைவான வார்த்தைகளை உச்சரித்தால் தொடர் போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் தமிழக மக்கள் மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் எச்சரித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.