மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருக்கடையூரில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கேயிலில் நேற்று (மார்ச் 27) மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்காக சுவாமி மற்றும் அம்பாள் திருமணக்கோலத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். சீர்வரிசை எடுத்து வந்து வேதியர்கள் மந்திரம் முழங்க ஹோமம் வளர்க்கப்பட்டது.
இதையடுத்து காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. குறிப்பாக இந்த நிகழ்வு தருமபுரம் ஆதீனம் 27ஆவது மடாதிபதியை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இறுதியாக சுவாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா : அலைமோதிய மக்கள் கூட்டம்