நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர் அருகே தண்ணீர் வற்றி புதர் மண்டிய குட்டகன்னி என்ற குளத்தில், பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் திட்டச்சேரி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் நாகப்பட்டினம் துணை கண்காணிபாளர் முருகவேல், நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விசாரணையில், அவர் திருப்புகலூர் மேல்பகுதி கிராமத்தைச் சேர்ந்த, தமிழ்வாணன் என்பது தெரியவந்தது.
பின்னர் அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், தந்தையை மகனே வெட்டி கொலை செய்ததும், கொலைக்கான தடையங்களை மறைக்க காட்டில் வைத்து எரித்ததும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தமிழ்வாணனுக்கு, ஜெயசுதா என்கிற மனைவியும், தமிழ்ச்செல்வன், சந்தியா, தவசீலன், தனுஷ் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
தாயிடம் தகராறு செய்த குடிகாரத் தந்தை: ஆத்திரத்தில் கொன்ற மகன்
நாகப்பட்டினம்: தாயிடம் தினமும் தகராறு செய்து வந்த தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.