மயிலாடுதுறை: குத்தாலம் அருகே உள்ள அரையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (17). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். லோகேஸ்வரன் இன்று (டிச.17) தேர்வினை முடித்துவிட்டு நண்பருடைய ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் வீட்டிற்குச் சென்றார்.
அப்போது கல்லூரி வாயிலில் நின்று கொண்டிருந்த சக நண்பர்களான கிருஷ்ணா மற்றும் பிரசன்னா ஆகியோரை தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மன்னம்பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அருகிலிருந்து கோயில் கேட்டை உடைத்து உள்ளே சென்று விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த லோகேஸ்வரன் கோயிலின் உள்ளே சுவற்றில் மோதி தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணா மற்றும் பிரசன்னா ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த சக நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: அத்தையை 10 துண்டாக வெட்டி கொலை செய்த இளைஞர்.. ஜெய்ப்பூரில் நடந்தது என்ன?