ETV Bharat / state

சேற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் -  நடவடிக்கை எப்போது? - பள்ளி செல்லும் மாணவர்கள்

நாகை: மயிலாடுதுறை அருகே உள்ள செட்டிக்கட்டளை கிராமத்தில் சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

settikattalai road issue
author img

By

Published : Nov 3, 2019, 11:05 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி ஊராட்சிக்குட்பட்ட செட்டிக்கட்டளை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இக்கிராமத்தைச்சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஓடக்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றுவருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்குச் செல்லவதற்கு ஓடக்கரை பாதை என்கிற ஒரு வழி மட்டுமே உள்ளது. சுமார் இரண்டு கி.மீ தொலைவுள்ள இந்தப் பாதையானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தச்சூழலில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் இச்சாலை சேறும் சகதியுமாகவுள்ளது.

சேறும் சகதியுமாக இருக்கும் செட்டிக்கட்டளை சாலையை கடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள்

பள்ளிக் குழந்தைகள் கடந்த ஒருவாரமாக சேற்றைக் கடந்தவாறே பள்ளிக்குச்செல்கின்றனர். இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மோசமான நிலையில் உள்ள சாலையைப் போர்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நாகை அருகே ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

Intro:மயிலாடுதுறை அருகே மணல்மேடு செட்டிக்கட்டளை கிராமத்தில்; சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி ஊராட்சி செட்டிக்கட்டளை கிராமத்தில்; 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஓடக்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்ல ஓடக்கரை பாதை என்கிற ஒருவழி மட்டுமே உள்ளது. 2 கி.மீ. தொலைவுள்ள இந்த பாதையில் சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சாலை போடப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பாதையில்; சுமார் அரை கி.மீ தொலைவுக்கு கடந்த ஒருவாரமாக பெய்துவரும் மழையால் சேறும் சகதியுமாக உள்ளது. பள்ளி குழந்தைகள் கடந்த ஒரு வாரமாக சேற்றில் நடந்தே பள்ளிக்கு செல்லும் அவலம் நீடித்து வருகிறது. இதனால், மாணவர்கள் சீருடையில் சேற்றுடன் பள்ளிக்கு செல்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையை போர்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும் என்பது இங்கு உள்ள மக்களின் கோரிக்கையாகும். கிராமப் பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் என்பதே கனவாகி உள்ள நிலையில் சாலை சரி இல்லாமல் இவர்கள் படும் பாடு கண்கலங்க வைக்கிறது.

பேட்டி:-

01, மோகன்குமார் - முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கடலங்குடி.
02, செல்வமதி - செட்டிக்கட்டளை.

03, இமானுவேல் - செட்டிக்கட்டளை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.