நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயர் உத்தரவின்பேரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
அதன்படி ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்ச்சி இன்று (மார்ச் 5) நடைபெற்றது.
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்ச்சியில் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாதிரி செயல் விளக்க மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாகையில் இருசக்கர வாகனம் திருட்டு- பட்டப்பகலில் கைவரிசை!