மயிலாடுதுறை: தமிழர்களின் வரலாற்றை நினைவுகூரும் பல்வேறு சிறப்புகள் உள்ள பூம்புகார் கலைக்கூடம், கண்ணகி கோவலன் வாழ்க்கை வரலாற்றுச் சிறப்பு சிற்பங்கள், சிறுவர் பூங்கா, ஒற்றைக்கால் தூண், கண்ணகி சிலை, பயணிகள் தங்கும் நத்தை மற்றும் சிற்பி வடிவிலான விடுதிகள் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்டது.
இதனால் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா வரும் பொதுமக்கள் சிதலமடைந்த பூம்புகார் சுற்றுலா பகுதியைச் சீரமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
புதுப்பிக்கப்படும் சுற்றுலா தலங்களால் மக்கள் மகிழ்ச்சி:
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சுற்றுலா தலம் சீரமைக்கும் பணிக்காக சுற்றுலா துறை சார்பாக 2018 - 19ஆம் ஆண்டுக்கான ரூ.2 கோடியே 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தப் பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது சுற்றுலா துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஏழை பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்