ETV Bharat / state

மின்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்! - mayiladuthurai district

மயிலாடுதுறை: சேமங்கலம் கிராமத்தில் மின்விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு மின்வாரியம் சார்பில் ரூ.5.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

மின்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம்!

author img

By

Published : Dec 12, 2020, 7:40 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சேமங்கலம் கிராமத்தில் மின்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சேமங்கலம், கூத்தனூர் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி வீசிய பலத்தகாற்றில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இந்த கம்பியை மிதித்ததில் பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சீதாராமன்(22) உயிரிழந்தார். இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் வீட்டில் வளர்த்த மாடு மற்றும் கன்றும் உயிரிழந்தன.

இதையடுத்து, உயிரிழந்த சீதாராமனின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் உயிரிழந்த கால்நடைகளுக்கான நிவாரணமாக ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்துக்கான வரைவோலையை மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் முத்துக்குமரன் ஆகியோர் சீதாராமனின் தந்தை பாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.

இதையும் படிங்க: வேலூரை கலங்கடித்த 'பிரியாணி' கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.