திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இடும்பாவனம் தொடக்க கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் புதுக்குடி நியாயவிலைக் கடையில் பணியாற்றி வரும் சித்ரா, மூணங்காடு கிராமங்களிலுள்ள பகுதி நேர நியாயவிலைக் கடைகளிலும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் மூணங்காடு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்ற அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதன் பெண் ஊழியர் சித்ராவிடம் வேறு ஒரு பகுதிநேர நியாயவிலைக் கடைக்கு சென்று, அப்பகுதி மக்களுக்கு பொருள்களை வழங்குமாறு கூறி தகராறு செய்தது மட்டுமின்றி அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை கண்டித்து, நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று இரவு(அக்.09) வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதனை கைது செய்ய வேண்டும் என்றும், நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையும் படிங்க: நாகை அருகே 690 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!