நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கடக்கம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலக கட்டிடம் உள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலக கட்டிடம் உள்ளது. இது மூன்று ஆண்டுகளாக பூட்டிய நிலையில் உள்ளது.
இதை ஒழுங்காக பராமரிக்காததால், நூலகத்தில் புதர் மண்டி, புத்தகங்கள் வைக்கும் இரும்பு இருக்கைகள் துருப்பிடித்தும் காணப்படுகிறது. மேலும் நூலக கட்டிடத்தின் வாசல் பகுதியில் படிக்கட்டுகள் உடைந்த நிலையில் உள்ளது.
இந்நூலக கட்டிடத்தை மீண்டும் திறந்து, மறுசீரமைப்பு செய்து நூலக நிர்வாகத்தின் நிரந்திர பணிக்கு ஒரு நபரை நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.