ETV Bharat / state

’வட சென்னை’ பட வசனம் பேசி காவல் நிலையம் முன்பு வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் கைது!

நாகை : வட சென்னை படத்தில் இடம்பெறும் ரவுடியிசம் குறித்த பிரபல வசனம் ஒன்றைப் பேசி காவல் நிலையம் முன்பு காணொலி எடுத்து வெளியிட்ட நபரை, காவல் துறையினர் கைது செய்தனர்.

கார்த்தி
கார்த்தி
author img

By

Published : Sep 25, 2020, 2:00 AM IST

சினிமா படங்களின் இசை, வசனங்களின் பின்னணியில், டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு வந்த இளைஞர்கள், டிக்டாக் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில மாதங்களாக காணொலிகள் வெளியிடாமல் கவலை சூழ்ந்து அமைதிக்காத்து வருகின்றனர். ஆனால் சிலரோ டிக்டாக் தடை செய்தால் என்ன என்று, மாற்று டெக்னாலஜியைக் கையில் எடுத்து, காணொலிகள் எடுத்து அவற்றுடன் பாடல்களைச் சேர்த்து தாங்களே காணொலிகள் எடிட் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நாகை மாவட்டம், வலிவலம் அருகேயுள்ள கொடியாளத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி எனும் நபர், வலிவலம் காவல் நிலையத்தின் முன்பு காணொலி ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் பின்னணி இசையில், ”நம்மள காப்பாத்திக்கறதுக்கு பேர் ரவுடியிசம்னா ரவுடியிசம் பண்ணுவோம்” எனும் வசனத்தைச் சேர்த்து எடிட் செய்து வெளியிட்டார்.

ரவுடியிசம் குறித்த வசனம் பேசி காவல் நிலையம் முன்பு வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் கைது

இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வலிவலம் காவல் துறையினர் கார்த்தி மீது மிரட்டும் தோனியில் காணொலி வெளியிட்டதாகக் கூறி வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து, பின்னர் பிணையில் அனுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.