மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சி மன்றத் தலைவரான தலித் இளம்பெண் பிரியா பெரியசாமியை சாதிரீதியாக அவமானப்படுத்திய ஊராட்சி மன்றத் துணை தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகார் மனுவில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரோலிங் சேர் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாதிரீதியாக அவமானப்படுத்திய ஊராட்சி மன்றத் துணை தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணைபோன ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க கூறியுள்ளனர்.
தொடர்ந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: விடுதலையான மெகபூபா முப்தி: வரவேற்ற ஃபரூக் அப்துல்லா