ETV Bharat / state

பிரசித்திபெற்ற திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு - திருமங்கையாழ்வார்

மயிலாடுதுறையில் பிரசித்திபெற்ற திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மூலவர் பெருமாள் தங்க ரத்தின அங்கியில் எழுந்தருளினார்.

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

author img

By

Published : Jan 2, 2023, 8:14 AM IST

வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை: திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமள ரெங்கநாதர் ஆலயம் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும்.

சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவதாக கருதப்படும் இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, இன்று (ஜனவரி 2) அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு பெருமாள் தங்க ரத்தின அங்கியில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக எழுந்தருளினார்.

சிறப்பு ஆராதனைகளுக்குப் பின், பெருமாள் பாசுரங்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இறுதியாக பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.