ETV Bharat / state

நாத்து நடும் நார்த் இந்தியர்கள்.. தமிழகத்தின் கடைகோடி வரை!

North Indians in Farming work at Nagapattinam: நாகப்பட்டினத்தில் நெல் நடவு பணிகளில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடி உற்சாகமாக பணியில் ஈடுபட்டனர்.

களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடி உற்சாகமாக பணியில் ஈடுபட்டனர்.
நெல் நடவு பணிகளில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 2:11 PM IST

நெல் நடவு பணிகளில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்

நாகப்பட்டினம்: தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக் கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நடப்பாண்டு மாவட்டத்தில் 73 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பம்புசெட் மற்றும் காவிரி நீரைக் கொண்டு அதிகளவில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, விவசாயப் பணிகளுக்குத் தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், இயந்திரம் மூலம் நடவு மற்றும் அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். அறுவடை பணி முழுவதும் இயந்திரம் மூலம் நடந்து வந்தாலும், நடவுப் பணிகளில் நாற்றுவிட்டு, பெண் தொழிலாளர்களைக் கொண்டு நடவு செய்யும் பணிகளை பல விவசாயிகள் செய்து வருகின்றனர்.

மேலும் சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும், இயந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதமடைவதை தவிர்ப்பதற்காகவும் பல விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி, கூலி ஆட்களை வைத்து நாற்று பறித்து, பெண் தொழிலாளர்களை வைத்து நடவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 100 நாள் வேலைக்கு ஆட்கள் சென்று விடுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயப் பணிகளின்போது நூறுநாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், இயந்திரம் அடைவு செய்ய, உழவடித்து சமன் செய்த வயலை ஓரிரு நாட்கள் காய வைத்த பிறகு நடவு இயந்திரத்தை கொண்டு நடவு செய்ய முடிகிறது. இதனால் வயலில் கோரை வளர்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, ஆட்கள் பற்றாக்குறையை சாமளிக்க வடமாநிலத் தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர்.

மயிலாடுதுறை அருகே கோடங்குடி பகுதியில் வடமாநில ஆண் தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 4,500 ரூபாய் சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் நாற்று பறித்து நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1 நாளைக்கு 4 ஏக்கர் வரை நடவுப் பணிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, பணிக்கான களைப்பு தெரியாமல் இருக்க வடமாநிலப் பாடல்களை பாடி உற்சாகத்துடனும், மிக நேர்த்தியாகவும் நெல் சாகுபடி முறையில் நாற்று பறித்து கைநடவு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. கரையோர மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.