நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மே தின பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளான மே தின விழா பேரணி தடையை மீறி நடைபெற்றது.
கட்சியின் மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாளர் ஈழவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் விளைநிலங்களை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது, காவிரி சமவெளிப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இதனால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ரயில்வே மேம்பாலத்தில் துவங்கிய இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து வட்டாட்சியர் அலுவலகம் அருகே முடிவடைந்தது.