ETV Bharat / state

நாகப்பட்டினம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

author img

By

Published : Mar 30, 2021, 7:19 AM IST

Updated : Mar 30, 2021, 10:37 AM IST

ஆதித் தமிழர்களான நாகர்கள் வாழ்ந்த பட்டணம் என்பதால் நாகப்பட்டினம் ஆனதாகப் பெயர் காரணம் கூறப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட நாகப்பட்டினம், சோழ மண்டல ராஜ்ஜியத்தின் துறைமுகப் பட்டணமாகச் செழித்திருந்திருந்தது. அனைத்து துறைமுக நகரங்களைப் போலவே வியாபாரிகளையும், ஆட்சியாளர்களையும் ஈர்த்து வந்த இந்தக் கரையோர நகரம், அப்போதிருந்த பல்சமயத்திற்கும் ஆதரவளித்திருந்தது. இங்கு ஒரு பௌத்த விஹார் இருந்ததாகச் சீனப் பயணி யுவான் சுவாங், தன் பயணக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றின் நீட்சியாய், சிக்கல் சிங்காரவேலர் கோயில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயில், நாகூர் ஆண்டவர் தர்ஹா என, மும்மதங்களின் புகழ்பெற்ற தளங்களையும், தன்னுள் கொண்டுள்ளது நாகப்பட்டினம் மாவட்டம். பெருவேந்தர்கள் தொடங்கி, மராட்டியர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் என பலரின் ஆளுகைக்கு கீழ் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் உப்பு காச்சிய பகுதியாய் வேதாரண்யம் இந்திய வரலாற்றில் இடம் பெற்றிருக்க, கூலி உயர்வு கேட்டதற்காக 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வன்கொடுமை வரலாற்றைத் தாங்கி நிற்கும் கீழ்வெண்மணியும், இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூரிலிருந்து பிரிந்து தனிமாவட்டமானது நாகப்பட்டினம். வேளாண்மையையும், மீன்பிடிப்பையும் முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த காவிரி கழிமுக மாவட்டம், வடக்கில் அண்டை மாநிலமான காரைக்காலும், மேற்கில் திருவாரூர் மாவட்டமும், கிழக்கில், தெற்கில் கடலாலும் சூழப்பட்டுள்ளது.

nagapattinam district watch
நாகப்பட்டினம் தொகுதிகள் வலம்

வாசல்

கடந்த தேர்தல் வரையில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டிருந்த நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதால், தற்போது ஒரு மக்களவைத் தொகுதியையும், நாகப்பட்டினம், கீழ்வேளூர்(தனி), வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தொகுதிகள் உலா:

நாகப்பட்டினம்: சோழர்கள் காலத்தில் பன்னாட்டு வியாபாரத்தில் செழித்திருந்தப் பகுதி நாகப்பட்டினம். புகழ்பெற்ற நாகூர் தர்கா, சிங்காரவேலர் கோவில் இந்தத் தொகுதியில் இருக்கும் ஆன்மிக அடையாளங்கள். விவசாயமும், மீன்பிடிப்பும் தொகுதியின் பிரதானத் தொழில்.

துறைமுகப் பட்டினமாக இருந்த நாகப்பட்டினத்தில் மீண்டும் பசுமைத் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அனைத்து பருவ காலத்தையும் தாங்கும் வகையில் நாகப்பட்டினத்தில் துறைமுகம் அமைப்படும் என, 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இன்று வரை அது அறிவிப்பாகவே தொடர்கிறது. நாகூர் வெட்டாறு பகுதியில் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. சுற்றுலாத் தலமான நாகூர் தர்க்காவை மேம்படுத்த வேண்டும்; தொகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்; நகரில் பராமரிக்கப்படாமல் உள்ள பாதாள சாக்கடைகளை சீரமைக்க வேண்டும்; நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்; நதிகளின் முகத்துவாரங்கள் மூலமாக கடல்நீர் உட் புகுந்து, விளைநிலங்களை உவர்ப்பாகி விடுகிறது இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இங்குள்ள மக்களின் கோரிக்கைகள் ஆகும்.

கீழ்வேளூர் (தனி): தமிழ்நாட்டில் குறைவான வாக்களர்களைக் கொண்ட தொகுதி. இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 79 ஆயிரத்து 264. தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இத்தொகுதி, தனித் தொகுதியாக விளங்குகிறது.

புகழ் பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், எட்டுக்குடி முருகன் கோயில் இத்தொகுதியின் ஆன்மிக அடையாளங்கள். விவசாயக்கூலிகள் 44 பேரை உயிருடன் எரித்துக் கொன்ற சாதிய வன்மத்தின் கோர வரலாறு தாங்கிய வெண்மணியும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த திருக்குவளை கீழ்வேளூர் தொகுதியிலேயே வருகிறது.

இந்தத் தொகுதியின் பிரதான பிரச்னை அடிப்படை வசதிகள் இல்லாதது. ஏற்கனவே இங்கு அமைப்பதாக அறிவிக்கப்பட்ட வேளாண் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். பொது நூலகத்திற்கு கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பன தொகுதியின் கோரிக்கைகள். தன்னிறைவு அடையாமல் இருக்கும் இந்தத் தொகுதியில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு, தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்ற வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் நீண்டகால எதிர்பார்ப்பு.

நாகப்பட்டினம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

வேதாரண்யம்: உப்புக்கு வரி கொடுக்க மறுத்து நடந்த உப்பு சத்தியாகிரகம்(தண்டி யாத்திரை) தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் தான் நடந்தது. மாநிலத்தில் உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது. ஒருங்கிணைந்த பறவைகள் மற்றும் வன உயிரின சரணாலயம் இந்தத் தொகுதியில் தான் அமைந்துள்ளது.

அமைச்சர் ஓ.எஸ். மணியனின் தொகுதி. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் அறிவித்த 'காஸ்டிக் சோடா' தொழிற்சாலை ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை அறிவிப்பாக மட்டுமே தொடர்கிறது. உப்பு உற்பதியை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இங்கு விளையும் உப்பை ஏற்றுமதி செய்ய சாலை மற்றும் ரயில் பாதை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் கோரிக்கையாகும். கோடியக்கரையின் சிறு படகுத் துறையையும், வடிகால் ஆறுகளையும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

களநிலவரம்:

ஒருங்கிணைந்த தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமான நாகப்பட்டினத்திலிருந்து, கடந்த 2019ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது. காவிரியின் வடிகால் மாவட்டமாகவும், கிழக்கு கடற்கரையில் அமைந்து இருப்பதால் அடிக்கடி இயற்கை சீற்றங்களுக்கு உள்ளாகிறது.

விவசாயம், மீன்பிடிப்பு, உப்பு உற்பத்தி தவிர வேறு தொழில் வாய்ப்புகளுக்கு வழியில்லை. இங்குள்ள கீழ்வேளூர் தொகுதி அடிப்படை வசதிகளில் தன்னிறைவு அடையாதத் தொகுதியாக இருக்கிறது. கடற்கரை மற்றும் விவசாயம் சார்ந்த பல தேவைகள் இன்னும் நிறைவேற்றித் தரப்படவில்லை.

கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படை மற்றும் அந்நாட்டு மீனவர்களால், இம்மாவட்ட மீனவர்கள் தாக்கப்பட்டு உடமைகளை இழப்பதும் தொடர் கதையாகிவருகிறது. இதற்கு இன்னும் நிரந்தரத் தீர்வு எடுக்கப்படவில்லை. பிரிக்கப்படாத மாவட்டத்தில் இருந்த ஆறு தொகுதிகளில் நான்கில் அதிமுகவும், ஒன்றில் அதன் கூட்டணிக் கட்சியும், ஒரு தொகுதியில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தன.

கடந்த 10 ஆண்டுகளில் ஆளுங்கட்சி நாகப்பட்டனம் மாவட்டத்தைப் புறக்கணித்து விட்டதாக மக்கள் கருதுகின்றனர். அமைச்சரின் தொகுதியில் கூட வாக்குறுதிகள், திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படவில்லை. இந்த மாவட்டதின் வெற்றியைத் தீர்மானிப்பதில் இடதுசாரிகள், இஸ்லாமியர்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், அவர்களைத் தன் கூட்டணியில் வைத்திருக்கும் திமுவிற்கு இந்த முறை வெற்றிக்கான வாய்ப்புகள் கூடுதலே.

Last Updated : Mar 30, 2021, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.