மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் ஊரடங்கால், கடந்த ஆறு மாத காலங்களாக எவ்வித நிகழ்ச்சிகளும் கிடைக்காமல் மாவட்ட கிராமிய இசைக் கலைஞர்கள் மற்றும் மெல்லிசை கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.
இவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தகுந்த இடைவெளியை கடைபிடித்தல், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், இவற்றை கடைபிடிக்காமல் இருப்பின் நேரும் விபரீதங்கள் குறித்தும் எமதர்மன் வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டத் தலைவர் டி.எல்.ஆர் ராஜேஸ்வரன் தலைமையில், சுமார் ஆறு மாத காலங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த கிராமியக் கலைஞர்கள் மற்றும் மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரணங்களும் பாரம்பரிய பறை இசை கலைஞர்களுக்கு ஐந்து பறைகளையும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு - கூடை பின்னும் தொழிலாளர்கள் வேதனை!