மயிலாடுதுறை: கடந்த 12ஆம் தேதி சாதி பெயரை சொல்லி திட்டியதாக சீர்காழி ஈசானியத் தெருவைச் சேர்ந்த ஆர்.பாபு, காவலர் டி.தனசேகர் ஆகிய இருவர் மீதும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து காவல் துறை உயர் அலுவலர்கள் நேரடி விசாரணை நடத்த வலியுறுத்தி நாடார் மக்கள் பேரவை நிறுவனர் ஏ.பி.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், “மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலித்து வருகின்றனர். மேலும்சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக பொய்யான புகார் அளித்து, அந்த புகாரை வாபஸ் வாங்க லட்சக்கணக்கில் பணம் கேட்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அக்.5ஆம் தேதி சீர்காழி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாதி மோதல்... பழிக்குப்பழி... தொடர் கொலை: 8 எஸ்.பி.க்கள் குவிப்பு - நெல்லையில் திக்... திக்...