ETV Bharat / state

மாட்டுக்கறி சாப்பிட்ட இஸ்லாமிய இளைஞரை தாக்கிய 4 பேர் கைது! - beef ban

நாகை: பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் மாட்டுக்கறி சாப்பிட்டதை முகநூலில் பதிவிட்டதற்காக கடுமையாக தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 பேர் கைது
author img

By

Published : Jul 12, 2019, 8:33 PM IST

Updated : Jul 13, 2019, 2:39 PM IST

நாகை மாவட்டம் அடுத்துள்ள, பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மது பைசான். இவர் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்ட புகைப்படத்தை, 'என்னதான் சொல்லு மாட்டுக்கறி மாட்டுக்கறிதான்யா' என்ற வாசகத்துடன் அவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட இந்து மக்கள் கட்சி, அமமுகவுடன், பிற கட்சி பிரமுகர்கள் சேர்ந்து முஹம்மது பைசானை, அவர் வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் கை, தோலில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பொரவச்சேரியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ்குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமது பைசான் முகநூலில் தொடர்ந்து இந்து மத ஆதிகத்திற்கு எதிரான கருத்துக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Intro:நாகையில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது:
Body: நாகையில் மாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது:

நாகை அடுத்துள்ள, பொரவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது பைசான். இவர் மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்ட தனது புகைப்படத்தை, "என்னதான் சொல்லு" "மாட்டுக்கறி மாட்டுக்கறி தான்யா" என்ற வாசகத்துடன் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பொரவச்சேரி பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி, அமமுக மற்றும் பிற கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் சிலர் முஹம்மது பைசான் வீட்டிற்குள் நுழைந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் கை மற்றும் தோல் பகுதிகளில் கத்தி குத்து வாங்கி படுகாயமடைந்த முஹம்மதுபைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் போலீசார், தலைமறைவாக இருந்த பொரவச்சேரியை சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ்குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(குறிப்பு: பொரவச்சேரி சேர்ந்த முகமது பைசான் என்பவர் தொடர்ந்து பேஸ்புக் முகநூலில் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தவர் என்பதும், இதனால் இஸ்லாமியரான அவர் பதிவிடும் கருத்துக்கு இந்துக்கள் பலர் எதிர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறதுConclusion:
Last Updated : Jul 13, 2019, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.