ETV Bharat / state

4 வழிச்சாலைக்கு இழப்பீடு வழங்கக்கோரி போராட்டம்! - thamimun ansari

நாகை: விழுப்புரம்-தூத்துக்குடி நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 வழிச்சாலை
author img

By

Published : Jul 24, 2019, 8:00 AM IST

விழுப்புரம்-தூத்துக்குடி இருவழிச்சாலையை ஆறாயிரத்து 431 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்காக மத்திய சாலை போக்குவரத்துத் துறை நாகை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தியது.

இதில் 2016ஆம் ஆண்டு நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலங்கள் நெடுஞ்சாலைத் துறை நில ஆர்ஜித அலுவலர்களால் கையகப்படுத்தப்பட்டன.

மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலம், வீடு உரிமையாளர்களுக்கு சதுரஅடிக்கு அரசு நிர்ணயித்த நான்காயிரம் ரூபாய்க்குப் பதிலாக வெறும் 40 ரூபாய் மட்டுமே அவர்களது வங்கிக் கணக்கில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களால் வரவு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தி மோசடி செய்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

அதில், நிலத்தை இழந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 'நான்கு வழிச்சாலைத் திட்டத்தை பொதுமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. நிலம் வழங்கியவர்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும்' உள்ளிட்ட கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

500க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து இந்த மக்களை அழைத்து பேச வேண்டும். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டார்.

Intro:விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியதில் மோசடி ; நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்.
Body:விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியதில் மோசடி ; நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்.

விழுப்புரம் -தூத்துக்குடி இருவழிச்சாலையை 6 ஆயிரத்து 431 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை நாகை மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நிலம் கையகப்படுத்தியது. இதில் 2016 ம் ஆண்டு நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலங்கள் நெடுஞ்சாலைத்துறை நில ஆர்ஜித அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலம் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு சதுர அடிக்கு அரசு நிர்ணயித்த 4 ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக வெறும் 40 ரூபாய் மட்டுமே அவர்களது வங்கி கணக்கில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளால் வரவு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தி மோசடி செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. நாகை புத்தூர் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நிலத்தை இழந்தவர்கள் குடும்பத்தோடு பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர். அப்போது பேசிய நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறுகையில் ; நான்கு வழி சாலை திட்டத்தை பொதுமக்கள் யாரும் எதிர்க்கவில்லை என்றும் நிலம் வழங்கியவர்களுக்கு உரிய தொகை வழங்க வேண்டும் என்றும், மோசடியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார். மேலும், தமிழக முதல்வர் அழைத்து பேச வேண்டும் என்றும், அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.