தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.05) தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி நாகப்பட்டினம் அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின் செய்தியளர்களை சந்தித்த அமைச்சர், ”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை பழனிசாமி சிறப்பாக நடத்தி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டிலும் ஆட்சியைப் பிடிப்போம் என்ற சூளுரையை இந்த நாளில் ஏற்கிறோம்.
ரஜினிகாந்த் தனது கட்சியைப் பதிவு செய்து, கட்சியின் கொள்கை, கட்சியின் பெயரை அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவோம். வெள்ள பாதிப்புக்களை சமாளிக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது என ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். அவர் அரசியல் பாடம் படிக்காதவர், அதனால் தான் அவ்வாறு கூறுகிறார்” எனத் தெரிவித்தார்.