நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற மார்ச் மாதம் 7ஆம் தேதி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி தீவிரமாக நடைபெற்று வரும் முன்னேற்பாடுகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”கொரோனோ வைரஸ் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என 2 ஆயிரத்து 358 நபர்களை கண்காணித்து இருப்பதாகவும், தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லையென அரசு உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,சீன கப்பலில் தமிழ்நாடு வந்த இருவருக்கும் ரத்த மாதிரி எடுத்து சோதித்தபோது அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விரைவில் பத்திரிகையாளர்கள் நலவாரியம் - கடம்பூர் ராஜூ