ETV Bharat / state

விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு...மு.க.ஸ்டாலிக்கு அமைச்சர் கேள்வி - பாரத் பந்த்

நாகப்பட்டினம் : பாரத் பந்த்-க்கு ஆதரவு தெரிவிக்கும் திமுகவால் புதிய வேளாண் திருத்தச்சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு உள்ளது என சொல்ல முடியுமா? என தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Minister SB Velumani
தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
author img

By

Published : Dec 8, 2020, 7:09 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார்நகரில் 34 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களின் தன்னிறைவு திட்டத்தின் கீழ், சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர், மீனவ கிராம மக்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆகியோர் கலந்துகொண்டு துறைமுக நிர்மான பணிகள் தொடங்குவது குறித்து மீனவர்களிடம் எடுத்துக் கூறினார்.

தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கு இடையூறாக இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது என்பதற்காகவே புதிய வேளாண் திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாடு விவசாயிகளுக்கு வேளாண் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை என்பதால், தற்போது நடைபெறும் கடை அடைப்பு வேலை நிறுத்தம் தேவையற்றது. மேலும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் திமுக, புதிய வேளாண் திருத்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு உள்ளது என சொல்ல முடியுமா? என்று மு.க.ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.