நாகப்பட்டினம் மாவட்டம் கடுவையாற்றின் குறுக்கே 16 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கதவணைக்கு பூமிபூஜை இன்று (பிப். 15) நடைபெற்றது. இதில், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டார்.
பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், "உலக அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய வீராணம் திட்டத்தில் மெகா ஊழல் செய்தது திமுக. வீராணம் திட்டத்தில் தகுதியற்ற ஒப்பந்ததாரருக்கு முன்பணம் வழங்கப்பட்டது எந்த அடிப்படையில்?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், "720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அத்திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் நாற்காலி மேல் பதவி வெறிபிடித்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: டெல்டா பாசன பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததே அதிமுகதான்!'