ETV Bharat / state

அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதாக மேலப்பெரும்பள்ளம் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்! - Melapperumpallam Villagers protest

தரங்கம்பாடி அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு அனுமதியுடன் இயங்கும் மணல் குவாரியில், சட்டத்துக்கு புறம்பாக அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதாக மேலப்பெரும்பள்ளம் கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Apr 15, 2023, 7:36 PM IST

தரங்கம்பாடி அருகே மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு அனுமதியுடன் இயங்கும் மணல் குவாரியில், சட்டத்துக்கு புறம்பாக அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த அறிவு என்ற தனியாருக்குச் சொந்தமான சவுடு மண் குவாரி இயங்கி வருகிறது. அரசு அனுமதி உடன் மணல் குவாரி நடத்தும் குத்தகைதாரர், விதியை மீறி பல அடி ஆழத்தில் மணல் அள்ளுவதாகவும், இந்த மணல் குவாரியால் மேலபெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் மற்றும் தலைச்சங்காடு போன்ற அருகில் இருக்கும் பதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அது மட்டுமல்லாமல், கடற்கரையை ஒட்டி உள்ள இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் வாய்க்காலில் கரை மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மணல் குவாரியில் ஐந்து ஹிட்டாச்சி இயந்திரங்ள் உடன், சுமார் ஒன்றரை மாதங்களாக மண் எடுத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதேநேரம் நாள் ஒன்றுக்கு, கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட லாரிகளில், 200 முறைக்கு மேல் மண் ஏற்றிச் செல்வதாகவும், இதனால் சாலையில் புழுதி பறந்தும், இரவு நேரங்களில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், இந்த குவாரியில் மண் எடுக்கும் பள்ளத்தில் ஆடு, மாடுகள் விழுந்து இறந்து போவதும் வாடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் வேதனை உடன் கூறுகின்றனர். தொடர்ந்து இந்த மண் குவாரியில் எடுக்கப்படும் மண், விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளுக்கு மண் எடுப்பதாக குவாரி தரப்பில் கூறப்படும் நிலையில், தனியாருக்கும் இந்த மண் விற்பனை ஆவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

இந்த நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக அதிக அளவு ஆழத்தில் மணல் அள்ளப்படுவதைக் கண்டித்து மேலப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குவாரிக்கு சென்று மணல் எடுக்கும் பள்ளத்தில் இறங்கி, குவாரியை தடை செய்யக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது மண் ஏற்றி நின்ற லாரியை மறித்து, மண்ணை கீழே‌ கொட்ட வைத்தனர். மேலும் 10க்கும் மேற்பட்ட லாரிகளை மறித்த பொதுமக்கள், அவற்றை சிறை பிடித்தனர்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து, மண் குவாரியை இழுத்து மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த பூம்புகார் காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து காவல் துறையினரும், பொதுமக்களும் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இருப்பினும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.‌

இதையும் படிங்க: மீனவர்கள் 61 நாட்கள் கடலுக்குச் செல்லத் தடை - மயிலாடுதுறை கலெக்டர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.