ETV Bharat / state

மயிலாடுதுறை மாற்று சமூக திருமண விவகாரம்: மாவீரன் வன்னியர் சங்கத் தலைவரை தேடும் போலீஸ்! - மயிலாடுதுறை மாவட்ட செய்தி

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மாற்று சமுதாய இளைஞர் திருமணம் செய்த விவகாரத்தில், மணமகனுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கடத்தப்பட்டது தொடர்பாக மாவீரன் வன்னியர் சங்கத் தலைவர் வி.ஜி.கே.மணிகண்டனை மயிலாடுதுறை போலீசார் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 14, 2023, 9:33 AM IST

மயிலாடுதுறை மாற்று சமூக திருமண விவகாரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் மயிலாடுதுறை நகரில் செல்போன் கடை, ஆட்டோமொபைல் ஷாப், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாருதி நகரில் வசிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த ரிக்கப் சந்த் நகரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பாலசந்தர் என்ற 20 வயது இளைஞரை காதலித்துள்ளார். இந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஜூலை 3ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் கடந்த 5ஆம் தேதி இருவரும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆஜராகினர். இதில் அப்பெண் மேஜர் என்பதால், அவரது விருப்பப்படி மணமகன் குடும்பத்தாருடன் வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில், பாலச்சந்தரின் குடும்பத்தினருக்கு நெருக்கமாக இருந்த மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் சாலியத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவரை கடந்த 7ஆம் தேதி அவரது வீட்டில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது.

இதையும் படிங்க: கழுமலையாறு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: பேச்சுவார்த்தையில் விவசாயிகள் வெளிநடப்பு

பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், தன்னை கடந்த 7ஆம் தேதி தனது வீட்டில் இருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் தன்னை கடத்திச் சென்று மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்ததாகவும், அப்போது வழுவூர் பகுதியைச் சேர்ந்த மாவீரன் வன்னியர் சங்கத் தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து, காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணையும், பாலச்சந்தரும் எங்கே இருக்கின்றனர் என்று கேட்டு தன்னை அடித்து தாக்கி, சித்ரவதை செய்ததாகவும் ராஜேஷ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நேற்றைய முன்தினம் (ஜூலை 12) புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, மாவீரன் வன்னியர் சங்கத் தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன், பாலச்சந்தரின் நண்பர் சதீஷிடம் செல்போனில் பேசிக் கொண்டே ராஜேஷைத் தாக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீசார் 365, 294 (டி), 352, 506 (2) கடத்தி சென்று ஆபாசமாக திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மாவீரன் வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: குறைந்த விலைக்கு காய்கறிகள் வழங்கும் திட்டம்: அடுத்த நாளே கடை மூடப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.